சென்டிரல்-அரக்கோணம் இடையே 10 மின்சார ரெயில்கள் இன்று இரவு ரத்து

ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2024-02-17 02:02 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து இன்று(சனிக்கிழமை) இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், மூர்மார்கெட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளுரில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், பட்டாபிராமில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராமில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சாரரெயில் ரத்து செய்யப்படுகிறது.

நாளை...

இதேபோல் ஆவடியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயிலும், மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 3.50 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் புறப்பட்டு, மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்