நாகர்கோவிலில் ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு; அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவிலில் ரூ.10 கோடி கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
ஆரல்வாய்மொழி,
நாகர்கோவிலில் ரூ.10 கோடி கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
அதிகாரிகள் மீட்டனர்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 63 சென்ட் இடம் நாகர்கோவில் அருகே உள்ள புன்னை நகர் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அறநிலையத்துறை வட்டாட்சியர் சஜித், முப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி, பணியாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலையில் துறை நில அளவையர்கள் அஜித், ராகேஷ் ஆகியோரால் அளக்கப்பட்டு நிலம் மீட்கப்பட்டது. பின்னர் அதில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இந்த நிலம் பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.