பயனற்ற பொருட்களை பெற 10 மையங்கள்
வந்தவாசியில் பயனற்ற பொருட்களை பெற 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி
வந்தவாசி நகராட்சி சார்பில் பயனற்ற பொருட்களை பொதுமக்களிடம் இருந்து பெற நகரில் 10 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
வருகிற ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி அன்றுவரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பயனற்ற துணிகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டு பொருட்களை இந்த மையங்களில் வழங்கலாம்.
மையங்களுக்கு நேரில் வந்து வழங்க முடியாதவர்கள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கொடுத்து அனுப்பலாம். இந்த பயனற்ற பொருட்கள் நகராட்சி மூலம் மறுசுழற்சி செய்யப்படும்.
இதையொட்டி வந்தவாசி வீராசாமி முதலி தெருவில் பயனற்ற பொருட்களை பொது மக்களிடமிருந்து பெறும் பணியை வந்தவாசி நகரமன்றத் தலைவர் எச்.ஜலால் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.ராமலிங்கம், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பழனி, நகரமன்ற உறுப்பினர் பா.சரவணகுமார், முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.