10 பேருக்கு 7 ஆண்டு சிறை

ஆலய சுற்றுச்சுவர் இடிக்கப்பட்ட வழக்கில் 10 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2022-12-05 18:45 GMT

களியக்காவிளை:

ஆலய சுற்றுச்சுவர் இடிக்கப்பட்ட வழக்கில் 10 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சுற்றுச்சுவர் இடிப்பு

தோலடியில் ஆதிபெந்தெ கொஸ்தே ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இருந்த சுற்றுச்சுவர் 100 மீட்டர் நீளம், 9 அடி உயரத்துக்கு 4-11-2014 அன்று இடிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மரங்களும் வெட்டப்பட்டது.

இதுதொடர்பா பளுகல் போலீசில் புகார் செய்யப்பட் டது. அதன்பேரில் செருவல்லூர் ஆடோட்டுகோணத்தைச் சேர்ந்த ஜாண் லிவிங்ஸ்டன், டைட்டஸ், சுந்தர தாஸ், தோலடியைச் சேர்ந்த ராபின்சன், அனீஸ், சூரன்குழியை சேர்ந்த ஷாஜி, காரகோணத்தை சேர்ந்த அருண்குமார், மேல்பாலையைச் சேர்ந்த சந்தோஷ், ஜோஸ், செருவல்லூரை சேர்ந்த தங்கராஜ் ஆகிய 10 பேர் மீது பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழித்துறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

10 பேருக்கு 7 ஆண்டு சிறை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புருஷோத்தமன் 10 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார் அரசு தரப்பில் வக்கீல் ராபி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்