அன்னக்கூடை தண்ணீரில் மூழ்கி 1½ வயது குழந்தை சாவு

திருவெண்ணெய்நல்லூர் அருகே அன்னக்கூடை தண்ணீரில் மூழ்கி 1½ வயது குழந்தை இறந்தது.;

Update: 2023-07-13 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் முகில்வணன். இவரது மனைவி ஆஷா. இந்த தம்பதிக்கு 1½ வயதில் தியாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த குழந்தை நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. ஆஷா, வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் குழந்தையின் சத்தம் கேட்கவில்லை. இதனால் ஆஷா, குழந்தை விளையாடிக்கொண்டிருந்த சமையலறைக்கு சென்றார். அங்கு அன்னக்கூடை தண்ணீரில் சிறுமி தியாஸ்ரீ, தவறி விழுந்து கிடந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர்கள் உதவியுடன் குழந்தையை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே குழந்தை தியாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்