கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 1½ வயது குழந்தை சாவு

கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.;

Update: 2022-10-12 19:30 GMT

மாரண்டஅள்ளி:-

கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

1½ வயது குழந்தை

மாரண்டஅள்ளி அருகே நடந்த இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மாரண்டஅள்ளி அருகே சாமனூர் ஜீவாநகரை சேர்ந்த அருணகிரி மனைவிசுகுணா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் தேன்மொழி (வயது1½). சம்பவத்தன்று காலையில் சுகுணா, சாம்பார் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிட்டு மாட்டிற்கு தண்ணீர் வைக்க வெளியே சென்றார்.

அப்பொழுது தூக்க கலக்கத்தில் எழுந்த வந்த குழந்தை தேன்மொழி நிலைதடுமாறி கொதிக்கும் சாம்பாருக்குள் விழுந்துள்ளாள். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சுகுணா ஓடிவந்துள்ளார்.

ஆஸ்பத்திரியில் சாவு

தன்னுடைய உறவினர்கள் உதவியுடன் குழந்தையை மீட்டு மாரண்டஅள்ளி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு குழந்தை தேன்மொழிக்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் தேன்மொழி பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்