ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு 1 ஆண்டு சிறை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2022-12-15 19:54 GMT

சேலம், 

சப்-இன்ஸ்பெக்டர்

சேலம் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ராஜேந்திரன் (வயது 50). கடந்த 2013-ம் ஆண்டு ஒரு அடி தடி வழக்கில் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்.

பின்னர் ஜெயிலில் அடைக்காமல் இருக்கவும், போலீஸ் நிலையத்திலேயே ஜாமீனில் விடவும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், பிரகாசிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

சிறை தண்டனை

இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் வைத்து லஞ்சம் வாங்கும் போது சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதன்படி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்