காரில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-11-22 18:45 GMT

களியக்காவிளை:

கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாகனசோதனை

குமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்டவை கேரளாவுக்கு அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது.

இதனால் வருவாய்த்துறையினர் மற்றும் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கடத்தல் அரிசிகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆற்றூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ரேஷன் அரிசிபறிமுதல்

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதையடுத்து அதிகாரிகள் தங்களது வாகனத்தில் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். அருமனை அருகே மாறப்பாடி பகுதியில் சென்றபோது, டிரைவர் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார்.

பின்னர் அந்த காரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் சிறு சிறு மூடைகளாக 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. அதைதொடர்ந்து அதிகாரிகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்