குடோனில் பதுக்கிய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லை அருகே குடோனில் பதுக்கிய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-02 21:03 GMT

நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் நெல்லை அருகே ரெட்டியார்பட்டி அட்சயாநகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகநயினார், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள பந்தளமூடு விளவன்கட்டுவிளையை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையில் போலீசார், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்