கோவையில் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கோவையில் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை
தமிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவற்றை தடை செய்துள்ளது. இருப்பினும் கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை ஒரு நிறுவனத்தில் மொத்தமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சுகதார ஆய்வாளர் தனபால் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது சேலத்தில் இருந்து லாரி மூலம் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைக்குள் இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் 1½ டன் எடையுள்ள அந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்தனர்.