தாரமங்கலத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-2 பேர் கைது

தாரமங்கலத்தில் கடத்தி வரப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-26 00:06 GMT

சேலம்:

தாரமங்கலம் பூக்கார வட்டம் 4 ரோடு அருகே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 29), ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா பகுதியை சேர்ந்த நாகராஜ் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசி மற்றும் வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்