சரக்கு வேனில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சரக்கு வேனில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-08-14 18:48 GMT

ஜெயங்கொண்டம்:

ரேஷன் அரிசி பறிமுதல்

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின்பேரில் அரியலூர் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் சின்னவளையம் திருச்சி- சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த சரக்கு வேனில் 300 கிலோ ரேஷன் அரிசியும், 750 கிலோ உடைக்கப்பட்ட ரேஷன் அரிசியும் என மொத்தம் 1,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வேன் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

தம்பதி கைது

மேலும் சரக்கு வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தியதாக நாகல்குழி கிராமம் கீழத்தெருவை சேர்ந்த சங்கர் (வயது 55), அவரது மனைவி வளர்மதி (42) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்