மினிவேனில் கடத்திய 1 டன் ரேஷன்அரிசி பறிமுதல்

வெண்ணந்தூர் அருகே மினிவேனில் கடத்தி வரப்பட்ட சுமார் 1 டன் ரேஷன்அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-27 18:45 GMT

ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று வெண்ணந்தூர் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது, அதில் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேஷன்அரிசி கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதையடுத்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான மினிவேனுடன், 1,100 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இந்த கடத்தலில் தொடர்புடைய வெண்ணந்தூரை சேர்ந்த விஜயகுமார் (வயது 22), விஜி (28) ஆகிய 2 பேரை குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இதில் தொடர்புடைய வேல்மணி என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்