பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.1½ லட்சம் அபேஸ்
ஆத்தூர் அருகே பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் அபேஸ் செய்யப்பட்ட பணத்தை போலீசார் மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சித்தரேவு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பிரியா. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை வங்கி மேலாளர் என்று அறிமுகம் செய்தாா். பின்னர் அவருடைய வங்கி கணக்கு விவரங்களை கேட்டதோடு, செல்போனுக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டுள்ளார். அதை கூறியதும் பிரியாவின் வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மாயமாகி விட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் செய்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை மீட்டனர். இதைத் தொடர்ந்து நேற்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பிரியாவிடம் அந்த பணத்தை ஒப்படைத்தார். அப்போது சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரன், இன்ஸ்பெக்டர் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.