ரூ.1 லட்சம் மதிப்பிலான 'பேரிக்கார்டுகள்'
வைத்தீஸ்வரன்கோவில் நகர வர்த்தக சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான ‘பேரிக்கார்டுகள்’போலீசாரிடம் ஒப்படைப்பு
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நகர வர்த்தக சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பேரிகார்டுகள் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர வர்த்தக சங்கத் தலைவர் பூக்கடை சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன், பா.ம.க. நகர செயலாளர் தில்லை கனகராஜ், நகர வர்த்தக சங்க துணை தலைவர் சபரிநாதன், நாடார் உறவின்முறை சங்க தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர வர்த்தக சங்க செயலாளர் ஜி. வி. என். கண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான 10 பேரிக்கார்டுகளை நகர வர்த்தக சங்கம் சார்பில் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணனிடம் வழங்கினர். இதில் அரிமா சங்க தலைவர் அகோரம், வட்டாரத் தலைவர் முத்துக்குமார், அரிமா சங்க நிர்வாகி ராமதாஸ், வர்த்தக சங்க நிர்வாகிகள் சாந்தமோகன், மதி, மூர்த்தி, சேகர், ஸ்டீபன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.