ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு

ஆரணியில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2023-02-18 13:02 GMT

ஆரணி

ஆரணியில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டுசேலை வியாபாரி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 52), பட்டு சேலை வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் இன்று பகலில் ஆரணி தச்சூர் சாலையில் உள்ள கனரா வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் எடுத்தார். பின்னர் ஆரணி பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தார்.

மீதித்தொகை ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் கையில் வைத்திருந்தார்.

அப்போது வங்கியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ததற்கு ஆதார் கார்டு மற்றும் பான்கார்டு நகலை கேட்டதால் அவர் தனது கையில் வைத்திருந்த பணத்தை ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் உள்ள பாக்சில் வைத்தார்.

பின்னர் ஆரணி காந்தி ரோட்டில் உள்ள தனியார் பிரவுசிங் சென்டருக்கு சென்று அங்கு சீட்டுக்கடியில் இருந்த ஆதார் கார்டு, பான்கார்டை எடுத்து ஜெராக்ஸ் போடச் சென்றார்.

ரூ.1½ லட்சம் திருட்டு

ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வெளியே வந்து பார்க்கும்போது சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு பார்த்தார். ஆனால் யாரும் பார்க்கவில்ைல என கூறினர்.

இதையடுத்து ஆரணி டவுன் போலீசில் சரவணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்தனர். மேலும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணியில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் வைக்கப்பட்ட பணம் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்