வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

விழுப்புரம் அருகே வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

Update: 2023-04-08 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (வயது 30). இவருக்கு அவரது நண்பர் மூலமாக வாட்ஸ்-அப் எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர், பகுதிநேர வேலை விஷயமாக ஒரு குறுந்தகவலை அனுப்பி அதனுடன் லிங்கும் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து வசந்த், அந்த லிங்கிற்குள் சென்றதும் டெலிகிராம் மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், வேறொரு லிங்கை அனுப்பி வைத்து சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனக்கூறியுள்ளார். இதை நம்பிய அவர், முதலில் ரூ.200 செலுத்தி ரூ.400-யும், ரூ.1,000 செலுத்தி ரூ.1,600-யும் திரும்ப பெற்றுள்ளார்.

அதன் பின்னர் வசந்த், தனது வங்கி கணக்குகள் மற்றும் போன்பே, கூகுள்பே மூலமாக அந்த மர்ம நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்கிற்கு 9 தவணைகளாக ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 923-ஐ அனுப்பி வைத்துள்ளார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னர் அவருக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்காமல் மர்ம நபர் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து வசந்த், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்