ரோபோ மென்பொருள் விற்பதாக ரூ.1¼ லட்சம் மோசடி

ஆன்லைனில் ரோபோ மென்பொருள் விற்பதாக ரூ.1¼ லட்சம் மோசடி செய்த பணத்தை திண்டுக்கல் போலீசார் மீட்டனர்.

Update: 2022-12-20 19:00 GMT

திண்டுக்கல்லை அடுத்த ராஜக்காபட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 38). இவர், ஆன்லைனில் ரோபோ மென்பொருள் விற்பதாக வந்த விளம்பரத்தை பார்த்தார். பின்னர் அதில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலுத்தினால், மென்பொருளை அனுப்புவதாக மர்ம நபர் தெரிவித்தார். அதை உண்மை என நம்பிய சுரேஷ்குமார் பணத்தை அனுப்பினார். ஆனால் மர்ம நபர் மென்பொருளை அனுப்பாமல் ஏமாற்றி விட்டார்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் சுரேஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் வெளிமாநிலத்தை சேர்ந்த மர்ம நபர் மோசடியில் ஈடுபட்டதும், அவருடைய வங்கி கணக்கில் பணம் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். அதை நேற்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சுரேஷ்குமாரிடம் வழங்கினார். அப்போது சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்