திருச்சபை மன்ற கட்டுமான பணிக்குரூ.1 லட்சம் நன்கொடை
திருச்சபை மன்ற கட்டுமான பணிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
மருதகுளம்:
மருதகுளம் சி.எஸ்.ஐ. தேவாலய வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தற்போது கட்டப்பட்டு வரும் திருச்சபை மன்றம் கட்டுமான நிதிக்கு தி.மு.க. அயலக அணி சிங்கப்பூர் துணை ெபாறுப்பாளர் எஸ்.ஜே.மகாகிப்ட்சன் சார்பில் ரூ.1 லட்சத்திற்கான நன்கொடையை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஆலய குருவானவரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் விஜய் டேனியல், தி.மு.க. நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு, சின்னத்துரை, இசக்கி பாண்டியன், மருதகுளம் தி.மு.க. கிளை செயலாளர் பாரத், பிரின்ஸ் கபடி குழு தர்மராஜ், தி.மு.க. அயலக அணியை சேர்ந்த அன்னை சங்கர், ஜான்ஸ், சுரேஷ், மணிராஜ், சத்தி, செல்வானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், முன்னாள் ஆசிரியர் ஜான் கோவில் பிள்ளை நன்றி கூறினார்.