கடையில் 1½ லட்சம் பணம், மளிகை பொருட்கள் திருட்டு

கடையில் 1½ லட்சம் பணம், மளிகை பொருட்கள் திருட்டு நடந்துள்ளது.

Update: 2023-08-07 19:32 GMT

ஜோலார்பேட்டை

கடையில் 1½ லட்சம் பணம், மளிகை பொருட்கள் திருட்டு நடந்துள்ளது.

ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் விஜயகுமார் (வயது 38). முன்னாள் ராணுவ வீரர். இவரும், இவரது நண்பர் கட்டேரி பகுதியை சேர்ந்த பிரேம்குமாரும் இணைந்து ஜோலார்பேட்டை அருகே ரெட்டியூர் கூட் ரோட்டில் மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் வழக்கம் போல நேற்று காலை கடையை திறந்த போது கடையில் மளிகை பொருட்கள் சிதறி கிடந்தது. கடையின் பின்பக்கம் இரும்பு தகடுகளை உடைத்து மர்ம நபர்கள் கல்லா பெட்டியில் வைத்திருந்த பணம் ரூ.1½ லட்சம் மற்றும் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள ஏலக்காய், மிளகு, சீரகம், லவங்கம், சுக்கு உள்ளிட்ட மளிகை பொருட்களை மூட்டை மூட்டையாக திருடி சென்றுள்ளது தெரிய வந்தது. கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 கண்காணிப்பு கேமரா ஹார்டு டிஸ்க்கையும் உடைத்து திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து விஜயகுமார் நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்