திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-09-15 19:48 GMT

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனை

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்நிலையில் இந்த விமானத்தில் வந்த ஒரு பயணி கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் பணிபுரியும் ஒரு துறையை சேர்ந்த டிரைவர் மூலம் வெளியே கொண்டு வர முயற்சி நடைபெறுவதாகவும், அந்த தங்கத்தை பெற வாகன நிறுத்தத்தில் ஒருவர் நிற்பதாகவும் தகவல் வந்தது.

இதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை கையும், களவுமாக பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கினர். இதனையடுத்து தீவிர சோதனை நடத்தி அந்த 2 பேரையும் பிடித்தனர்.

ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் தங்கம் கடத்தலில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்