1¼ கிலோ கஞ்சா பறிமுதல்

Update: 2023-08-28 18:45 GMT

நாமக்கல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் மற்றும் போலீசார் நேற்று செல்லப்பா காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கரடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் செல்லப்பா காலனியை சேர்ந்த ராஜா என்கிற வெங்கடாஜலபதி (வயது47) என்பதும், கஞ்சா வைத்து இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.16 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்