தஞ்சையில் 1½ மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை

தஞ்சையில் 1½ மணிநேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-10-14 21:16 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையில் 1½ மணிநேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுட்டெரித்த வெயில்

கோடைகாலம் முடிந்த பின்னரும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இந்த நிலையில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. ஆனால் மழை பெய்யவில்லை.புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியது.

வெளுத்து வாங்கிய மழை

இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அண்ணாசிலை, சிவகங்கை பூங்கா, மேலவீதி , வடக்குவீதி பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. திடீரென மழை பெய்ததால் வெளியே சென்றிருந்தவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பினர். கூலி வேலைக்கு சென்று திரும்பிய தொழிலாளர்களும் நனைந்தபடியே வீடு திரும்பினர்.மேலும் மழை வெளுத்து வாங்கிய போது காற்றும் பலமாக வீசியது. மேலும் இருள்சூழ்ந்து காணப்பட்டதால் வாகனங்களும் விளக்குகளை எறியவிட்டபடி சென்றன. 6.45 மணி வரை இந்த மழை நீடித்தது. 1¾ மணி நேரம் மழை கொட்டியதால் தஞ்சையில் எங்கு பார்த்தாலும் மழைநீர தேங்கி காணப்பட்டது. இதே போல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை காணப்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இ்நத மழையினால் வெப்பம் தணிந்து இரவில் குளிர் நிலவியது. தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் இன்றி குறுவை நெற்பயிர்கள் கருகி வந்தன.இந்த நிலையில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தற்போது மழை பெய்த்தொடங்கி இருப்பதால் சம்பா சாகுபடி பணிகளை தொடங்குவதகு ஏதுவாக இருக்கும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்