சாத்தூரில் 1 மணி நேரம் மழை
சாத்தூரில் 1 மணி நேரம் பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாத்தூர்,
சாத்தூரில் 1 மணி நேரம் பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திடீர் மழை
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வருகிறது. காலையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மாலையில் தினமும் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் மழை பெய்யும் என எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்த போதும் சாத்தூர் பகுதிகளில் மட்டும் பெய்யவில்லை.
இந்தநிலையில் நேற்று திடீரென மழை பெய்தது. சாத்தூர், போத்திரெட்டிபட்டி, தெற்குப்பட்டி, நள்ளி, நள்ளி சத்திரம், குமாரபுரம், புல்வாய்பட்டி, முள்ளிசெவல், சத்திரப்பட்டி, சடையம்பட்டி, ஒ.மேட்டுப்பட்டி, ஒத்தையால், கண்மாய் சூரங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
நேற்று மாலை 3.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 4.30 மணி வரை நீடித்தது. இதனால் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பம் தணிந்து நேற்று இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.