222 பேருக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்

ஆனாங்கூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 222 பேருக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகன் வழங்கினார்.

Update: 2022-10-12 18:45 GMT

விழுப்புரம் தாலுகா ஆனாங்கூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் அனைவரையும் வரவேற்றார்.

முகாமில் 222 பேருக்கு ரூ.1 கோடியே 33 லட்சத்து 48 ஆயிரத்து 450 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகன் வழங்கினார்.

கிராமங்கள் வளர்ச்சி

அப்போது அவர் பேசுகையில், கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் தமிழகம் நிலையான வளர்ச்சியை அடைந்திட முடியும் என்ற வகையில் அரசே மக்களை தேடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றிடும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாதந்தோறும் 2 முறை நடத்தப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள் உடனடியாக கிடைக்கப்பெற்று வருகிறது. இம்முகாமில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

இம்முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பொன்னம்பலம், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரகுபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், துணைத்தலைவர் உதயகுமார், மாவட்ட கவுன்சிலர் வனிதா அரிராமன், ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்