ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.1 கோடி நலத்திட்ட உதவி
அணைக்கட்டில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.1 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிறைவு விழை நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் க.கவிதா தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென்காந்தி, குமரேசன், வருவாய் ஆய்வாளர் ரேவதி, தலைமை நில அளவையர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் வேண்டா வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு தொகுதி ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 195 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது பொதுமக்கள் 378 மனுக்கள் அளித்துள்ளனர். அந்த மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 195 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் ஆயிரம் பேருக்கு பட்ட வழங்கப்பட உள்ளது. முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்களில் முதல் கட்டமாக 723 பேருக்கு ஓய்வூதியம்வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், குமார பாண்டியன், கெங்க நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.