இருளர் இன மக்களுக்கு ரூ.1 கோடியில் வீடு கட்டும் பணி

இருளர் இன மக்களுக்கு ரூ.1 கோடியில் வீடு கட்டும் பணியை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

Update: 2022-11-29 18:56 GMT

திருப்பத்தூர் ஒன்றியம் ஜம்மணபுதூர் ஊராட்சி பகுதியில் ஏரிக்கரை பகுதியில் பாம்பு பிடிக்கும் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தொடர்மலை காரணமாக வீடுகள் இல்லாமல் தவித்தனர். எனவே அவர்கள் தங்களுக்கு வீடுகட்டி தரும்படி நல்லதம்பி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின்பேரில் 43 இருளர் இன குடும்பங்களுக்கு ஏ.கே.மோட்டூர், சுடுகாரன் வட்டம் பகுதியில் 43 குடும்பங்களுக்கு தலா 2½ சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பகுதிக்கு உதயா நகர் என ஊராட்சி சார்பில் பெயர் வைக்கப்பட்டு, பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தலா ரூ.2.40 லட்சம் செலவில் 43 வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பி.வேலு தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிவப்பிரகாசம் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், மாவட்ட கவுன்சில் எம்.ஆர்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய பெயர் பலகையை திறந்து வைத்து, வீடு கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர் விஜியா அருணாச்சலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், மணவாளன், மாவட்ட கவுன்சிலர் சத்தியவானிவில்லம், கூட்டுறவு சங்க தலைவர் சின்னப்பையன் உள்பட பல கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து ஜம்மணபுதூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நல்லதம்பி எம்.எல்.ஏ. சொந்த செலவில் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஞானசெல்வி ஜெய்சங்கர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நல்லதம்பி எம்.எல்.ஏ. பேனா, நோட்டு புத்தகங்கள் வழங்கி, மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்