தொழில் அதிபாிடம் ரூ.1 கோடி மோசடி

தொழில் அதிபாிடம் ரூ.1 கோடி மோசடி

Update: 2023-03-17 18:45 GMT

கோவை

கோவை தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக பங்குதாரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

தொழில் அதிபர்

கோவை நீலி கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் சாஜித் (வயது 31). இவர் கடந்த 2014-ம் ஆண்டு தனியார் கல்வி நிறுவனம் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் பங்குதாரராக அஜய் மேனன் (35) என்பவர் இருந்தார். இவர் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று கூறி சாஜித்திடம் ரூ.1 கோடியே 5 லட்சம் வாங்கியதாக தெரிகிறது.

அதனை அவர் திருப்பி தராமல் இருந்து வந்தார். சாஜித் பல முறை பணத்தை திருப்பி கேட்டும் அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சாஜித் இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்து உள்ளர்.

பங்குதாரர் மீது வழக்கு

போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்பேரில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தினார்.

பின்னர் அஜய்மேனன் மீது போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அஜய்மேனன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழில் அதிபரிடம் ரூ.1.5 கோடி பெற்றுக்கொண்டு திருப்பி கொடுக்காத பங்கு தாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-------------------

Tags:    

மேலும் செய்திகள்