ரூ.1¾ கோடி உண்டியல் வருமானம்
ராமேசுவரம் கோவிலில் ரூ.1¾ கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி கடந்த ஜூன் மாதத்துக்கான உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டது.
கோவிலின் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் உதவி ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் மேலாளர் மாரியப்பன், ஆய்வாளர் பிரபாகரன், பேஸ்கார்கள் பஞ்சமூர்த்தி, கமலநாதன் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ரூ.1 கோடியே 81 லட்சத்து 47 ஆயிரத்து 725-ம், தங்கம் 90 கிராம் 100 மில்லி கிராமும், வெள்ளி 3 கிலோ 170 கிராமும் கிடைத்தன.