பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்;
நாகர்கோவில்,
நாகர்கோவில் வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் நிவாஷ்கர் ஆகியோர் நேற்று சுசீந்திரம் ஆனைபாலம் அருகே குளத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மறைவான இடத்தில் 800 கிலோ ரேஷன் அாிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோணம் அரிசி குடோனில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்திய போது, ரேஷன் அரிசி மூடைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. அந்த அரிசி மூடைகளை பதுக்கி வைத்தது யார்? என்பது தெரியவில்லை. அதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.