"திராவிட மாடல் அரசின் நாயகன்" மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி புகழாரம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.;
சென்னை,
இன்று 71-வது பிறந்த நாள் கொண்டாடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய மந்திரி நிதின் கட்காரி, பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுல பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்களை கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், திராவிட மாடல் அரசின் நாயகன் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.