மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமிக்கு 32-வது வயது பிறந்தது

Lakshmi, the elephant of Malaikotta temple, was born on the 32nd year of her life

Update: 2022-11-15 20:05 GMT

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் யானை லட்சுமி, கடந்த 1993-ம் ஆண்டு இந்த கோவிலுக்கு வழங்கப்பட்டது. அப்போது இந்த யானைக்கு 2 வயது ஆகியிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த யானை கோவிலுக்கு வந்து 29 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இந்த யானைக்கு 31 வயது முடிவடைந்து, 32-வது வயது பிறந்துள்ளது. இதையொட்டி நேற்று கோவிலில் யானைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவிலில் மாணிக்க விநாயகர் சன்னதி எதிரில் உள்ள மண்டபத்தில் லட்சுமி யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

முன்னதாக நேற்று காலை யானையை குளிக்க வைத்து, நெத்திச்சுட்டி வரைந்து, காலுக்கு கொலுசு அணிவிக்கப்பட்டது. பின்னர் யானைக்கு வஸ்திரம் அணிவித்து, படையல் போடப்பட்ட சர்க்கரை பொங்கல் மற்றும் பல்வேறு பழங்களை கோவில் அதிகாரிகள் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கோவிலில் முதல் முறையாக லட்சுமி யானைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்