மருத்துவக்குடியில் ரூ.25 லட்சத்தில் உள்விளையாட்டரங்கம் கட்ட பூமிபூஜை

டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிதியில் மருத்துவக்குடியில் ரூ.25 லட்சத்தில் உள்விளையாட்டரங்கம் கட்ட பூமிபூஜை நடந்தது.

Update: 2023-05-19 20:35 GMT

திருவிடைமருதூர்:

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் ஆடுதுறை பேரூராட்சி மருத்துவக்குடி நாகக்குளகரையில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ம.க.ஸ்டாலின், செயல் அலுவலர் சி.ராம்பிரசாத், துணைத்தலைவர் கமலா சேகர், கவுன்சிலர்கள் ம.க.பாலு, சமிம்நிஷாஷாஜகான், முத்துபீவிஷாஜகான், பரமேஸ்வரி சரவணன், பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.பி.குமார், பேரூராட்சி இளநிலை பொறியாளர் குமரேசன், கிராம நாட்டாண்மைகள் எம்.பி.ஆர்.இளங்கோவன், சி.பாலகிருஷ்ணன், கே. அசோக்குமார், எஸ். ரமேஷ், ஆர்.பாலகுரு, எம். ராமன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதி.விமல், பா.ம.க. பொறுப்பாளர்கள் சாமிநாதன், வினோத், இளஞ்செழியன், ஒப்பந்தக்காரர் ஞானபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்