மதுரை: கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைதான நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.;

Update:2023-12-27 01:35 IST

மதுரை,

கடந்த 2014-ல் மதுரை, திருமங்கலம் பகுதியில் கல்லூரி மாணவிகள் மீது வாலிபர் ஒருவர் ஆசிட் வீசிவிட்டு தப்பினார். இதில், 2 மாணவிகளும் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருமங்கலம் ராஜம்நகர் பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன் (வயது 33) என்பவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் சங்கரநாராயணன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதனால் அவருக்கு 22 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நாகராஜன் நேற்று தீர்ப்பளித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்