இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர்கள் 2 பேர் படுகாயம்

politician injured

Update: 2022-11-15 19:00 GMT

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் மேல்கொண்டாழி தெற்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது59). தோட்டச்சேரியை சேர்ந்தவர் மணிமாறன் (50). இ்ந்திய கம்யூனிஸ்டு பிரமுகர்களான இவர்கள் மோட்டார் சைக்கிளில் தோட்டச்சேரியில் இருந்து கூத்தாநல்லூர் நோக்கி சென்றனர். லெட்சுமாங்குடி அய்யனார் கோவில் அருகே இவர்கள் சென்ற போது எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், நாகராஜன், மணிமாறன் ஆகிய இருவரும் படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர், கூத்தாநல்லூர், புளியங்குடி, கீழத்தெருவை சேர்ந்த ஏசுபிள்ளை(30) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்