ரூ.2 கோடியில் சாலை, பாலம் அமைக்க திட்டம்

சங்கராபுரம் அருகே ரூ.2 கோடியில் சாலை மற்றும் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-11-15 18:45 GMT

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே நெடுமானூர்- பொய்குணம் இடையே உள்ள சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் நெடுமானூர் ஏரி வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்ட பாலமும் இடிந்து விழுந்து விட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பிரதம மந்திரியின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் அங்கு சாலை மற்றும் பாலம் அமைக்க திட்டப்மிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சாலை, பாலம் அமைப்பது தொடர்பாக சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் நெடுமானூர்-பொய்க்குணம் இடையே சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தனர். அப்போது ஒன்றிய பொறியாளர் சபான்கான், ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியம் நாகராஜ், ஊராட்சி செயலாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்