கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-26 18:38 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடையார் காலனி தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் சிவா (வயது 22), அதே பகுதியில் வசிக்கும் கலியமூர்த்தி மகன் கபிலன் (21) ஆகியோர் அப்பகுதியில் உள்ள புளியந்தோப்பில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்