சாம்சங் தொழிலாளர்கள் இருவருக்கு 15 நாள் சிறை

சாம்சங் தொழிலாளர்கள் இருவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.;

Update:2024-10-09 16:39 IST

காஞ்சிபுரம்,

சாம்சங் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாகக் கூறி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் வலியுறுத்தி இருந்தார்.

அதன்படி இந்த வழக்கு இன்று பிற்பகல் நீதிபதிகள் பாலாஜி, அருள்முருகன் அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாக சிஐடியு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடையில்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சாம்சங் தொழிலாளர்கள் 2 பேருக்கு சிறை தண்டணை விதித்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி சாம்சங் தொழிலாளர்களான எலன் மற்றும் சூரிய பிரகாசுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டனை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தொழிலாளர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்