கீழக்கரையில் ரூ.13½ லட்சத்தில் சிறுவர் பூங்கா

கீழக்கரையில் ரூ.13½ லட்சத்தில் சிறுவர் பூங்காவை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Update: 2022-11-15 18:45 GMT

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வடக்கு தெருவில் அமைந்துள்ள ரூபி கார்டனில் ரூ.13½ லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்கா திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க, செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு 7-வது வார்டு கவுன்சிலர் மீரான் அலி, வடக்கு தெரு ஜமாஅத் தலைவர் ரெத்தின முஹம்மது, தி.மு.க, நகர் செயலாளர் பஷீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பூங்காவை பார்க்க ஆவலுடன் வந்த சிறுவர்களை தூக்கி எம்.எல்.ஏ. குழந்தைகள் நல்வாழ்த்து கூறி பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான், நகராட்சி ஆணையர் செல்வராஜ், பொறியாளர் அருள், துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், தி.மு.க, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுபியான், நயீம், கவுன்சிலர்கள் முகமது பாதுஷா, நசீருதீன், மீரான் அலி, பயாஸ்தீன், நவாஸ், சுஐபு, தி.மு.க. உறுப்பினர்கள் மணிகண்டன், கென்னடி, யூசுப், சதக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்