வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

The teenager was sentenced to 10 years in prison

Update: 2022-11-15 19:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், தெம்மாவூர் அருகே கொப்பம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 19). இவர், 18 வயதுடைய ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கடந்த 2019-ல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து பெண்ணின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வீரமணியை கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர்.சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக வீரமணிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வீரமணி திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணை முறையாக செய்த கீரனூர் போலீஸ் நிலைய போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டு தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்