ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம்

உலக நன்மை வேண்டி ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம்

Update: 2023-07-01 18:45 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூர் அருகே ஆக்கூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான வால்நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. சோழ மன்னர்களில் ஒருவரும் 63 நாயன்மார்களில் ஒருவரான கோச் செங்கட் சோழ மன்னரால் அமைக்கப்பட்ட மாடக் கோவில்களில் ஒன்றான இந்த கோவில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று உலக நன்மை வேண்டி ருத்ர யாகம் நடைபெற்றது. இதில் யாக குண்டங்கள் அமைத்து, சிவாச்சாரியார்கள், 108 மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து வேத பாராயணம், மந்திரங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோவிலை வந்தது. பின்னர் தான்தோன்றீஸ்வரர், நெடுங்கண்ணி அம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்