மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர். அஜித் பிரபு குமார் உத்தரவின்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ராஜ்மோகன் மேற்பார்வையில், திருவெண்காடு அருகே நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இளநிலை பூச்சியியல் வல்லுனர் தனம் தலைமை தாங்கி மாணவர்களுக்கு மலேரியா காய்ச்சல் குறித்து பேசினார். இதில் மருத்துவ அலுவலர் சாய்பவானி, பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம்மோகன், சுகாதார ஆய்வாளர்கள் துரை கார்த்திக், ரவிக்குமார், நந்தகுமார், சுந்தரம் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.