சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்

பந்தலூரில் மழை பெய்யும் போதெல்லாம் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;

Update: 2023-06-03 20:45 GMT

பந்தலூர்

பந்தலூரில் மழை பெய்யும் போதெல்லாம் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொடர் மழை

பந்தலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பந்தலூர், மேங்கோரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, கொளப்பள்ளி, மழவன் சேரம்பாடி, அய்யன்கொல்லி, அம்பலமூலா, பாட்டவயல், சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன.

இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டது. விளைநிலங்களில் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் முறிந்து விழுந்தன. இதை பார்த்த விவசாயிகள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். தொடர் மழை பெய்து வருவதால் பந்தலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஆட்டோக்கள், பிற வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்த படி செல்கின்றன.

பாலம் அமைக்க வேண்டும்

மேலும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர். அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நெல்லியாளம் நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், கால்வாய் உயரமாக உள்ளதால், அதில் மழைநீர் செல்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதோடு, தேங்குவது வாடிக்கையாகி விட்டது.

இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக பந்தலூர்-கூடலூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, முக்கிய சாலையில் மழை பெய்யும் நேரங்களில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த அவலநிலையை போக்க சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலையின் நடுவே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மழைநீர் வடிந்து செல்லும் வகையில் கால்வாயை சரிசெய்ய வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்