லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
பந்தலூர் அருகே லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பந்தலூர்
பந்தலூரில் இருந்து ஒரு லாரி கட்டுமான பொருட்களை ஏற்றி கொண்டு குந்தலாடி வழியாக வயநாடு மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. குந்தலாடி அருகே பொன்னானி குறுகிய வளைவில் சென்ற போது, லாரி திடீரென பழுதடைந்து நடுரோட்டில் நின்றது. இதனால் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அவதியடைந்தனர்.
பின்னர் லாரியில் பழுது சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்து சீரானது. பந்தலூர்-கேரளா சாலையில் அடிக்கடி லாரிகள் பழுதாகி நிற்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, குறுகிய சாலையில் லாரிகள் செல்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.