அதிகாரிகளுக்கு நீர்வள பாதுகாப்பு பயிற்சி

ஊட்டியில் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-06-03 19:45 GMT

ஊட்டி

ஊட்டியில் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முகாம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை சார்பில் மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு, நீர் பிடிப்புப் பகுதி மேலாண்மை குறித்த 3 நாட்கள் பயிற்சி முகாம் ஊட்டியில் நடைபெற்றது. முகாமுக்கு தலைமை விஞ்ஞானி சுனில் குமார் தலைமை தாங்கினார்.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேளாண்மை இணை இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர், உதவி பொறியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலம் பங்கேற்றனர். பயிற்சி குறித்து மூத்த விஞ்ஞானி வனிதா விவரித்தார்.

பருவநிலை மாற்றம்

ஆராய்ச்சி மைய (பொறுப்பு) தலைவர் சுந்தராம்பாள் கலந்து கொண்டு, மாறிவரும் காலநிலை சூழ்நிலையில் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் நீர் பிடிப்பு பகுதி திட்டங்களின் முக்கியத்துவம், மண் அரிப்பு, நிலச்சிதைவு மற்றும் பருவநிலை மாற்றத்தால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், காலத்தின் தேவையாக மேம்பட்ட கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசினார். இதைத்தொடர்ந்து நீர் பிடிப்புப்பகுதி மேலாண்மையில் நில வள இருப்பு, காலநிலை மாற்றத்தின் தாக்கம், இயற்கை வள மேலாண்மை, அயலூர் நீர் பிடிப்புப்பகுதி மற்றும் சமூக அமைப்பு, பொருளாதார தாக்க மதிப்பீடு, பல்வேறு தோட்டக்கலை மற்றும் வேளாண் காடு வளர்ப்பு அமைப்புகள், வாழ்வாதார ஆதரவுக்கான உயிரியல் மற்றும் எந்திர நடவடிக்கைகள் மற்றும் நீர்நிலை மேலாண்மையில் குறுந்தொழில்கள் பற்றிய பிற தலைப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கபட்டது. இதையடுத்து இடுஹட்டி ஆராய்ச்சி பண்ணை மாதிரி நீர் பிடிப்புப்பகுதியில் கள ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்