தேனி பஸ் நிலையத்தில்முதியவரை தாக்கியவர் கைது
தேனி பஸ் நிலையத்தில் முதியவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் சித்திக் (வயது 62). நேற்று இவர், கேரளாவில் இருந்து பஸ்சில் தேனி பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுவர்களுக்கு அவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வெளியே சென்றார். இதையடுத்து வெளியே வந்த சித்திக் ஓட்டல் முன்பு நின்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டதும் ஓட்டல் ஊழியரான ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜகோபாலன்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் (53) என்பவர் ஓட்டல் முன்பு கூட்டம் போடக்கூடாது என்றார். மேலும் அவர் சித்திக்கை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கைகளால் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சித்திக் தேனி போலீசில் புகாா் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தராஜை கைது செய்தனர்.