பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமையில் நடந்தது.

Update: 2023-05-17 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமையில் நடந்தது.

சட்டைநாதர் கோவில்

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு வருகிற 24-ந் தேதி(புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவை காண சுமார் 2 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள். அவர்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, பொது சுகாதாரம், பார்க்கிங் வசதி போன்றவைகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் தாசில்தார் செந்தில்குமார், கோவில் தேவஸ்தானம் சூப்பிரண்டு தியாகராஜன், திருப்பணி உபயதாரர் முரளி, நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகராட்சி தலைவர் துர்கா ராஜசேகரன், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் முத்துராமன், ரவி, வருவாய் ஆய்வாளர் சுகன்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி, மண்டல துணை தாசில்தார் ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெங்கடேஷ், சரவணன், சீர்காழி அரசு தலைமை ஆஸ்பத்திரி சார்பில் டாக்டர் அறிவழகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கும்பாபிஷேக விழாவிற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பேசினர்.

இதில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம், நடமாடும் கழிப்பறை ஆகியவற்றை நகராட்சி சார்பில் மேற்கொள்வது என்றும், 4 வீதிகளிலும் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம் அமைத்திடவும், தெற்கு மற்றும் கிழக்கு வாசல் பகுதிகளில் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

நேரில் ஆய்வு

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி, விளையாட்டு மைதானம், ஈசானிய தெரு காமராஜர் நகர் பகுதி, மார்கோனி கார்டன், விவேகானந்தா பள்ளி மைதானம் போன்ற சில இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்குவார்கள் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்