முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
சிதம்பரம் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா நகர் கம்பர் சாலை பகுதியை சேர்ந்தவர் வில்லாளன் (வயது 75). இவர் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வில்லாளன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வில்லாளன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.