பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள கூளநாயக்கன்பட்டியில் உள்ள சின்ன முத்தையாசாமி கோவில், பொம்மையசாமி கோவில் மற்றும் ஜக்காளம்மன் கோவில் நிலங்களை ஏலம் விடுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது. இதை கண்டித்து கூளநாயக்கன்பட்டியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மாநில துணை தலைவர் மதுசூதனன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், கடந்த 200 ஆண்டுகளாக 20 குடும்பங்களை சேர்ந்த நில உரிமையை பறிக்க கூடாது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்து சமய அறநிலையத்துறை ஏல நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றனர்.