கஞ்சா விற்ற வாலிபர் கைது

வாலாஜா அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-02 17:10 GMT

வாலாஜா அருகே வி.சி.மோட்டூர் கிராமம் தனலட்சுமி நகரை சேர்ந்த பாபு சத்தியமூர்த்தி என்பவரின் மகன் ஜெய் கணேஷ் (வயது 21).

இவர் வி.சி.மோட்டூர் சுடுகாட்டு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து வாலாஜா போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்